Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 609

சூதுகொலை கார ராசைபண மாதர்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தானதன தான தானதன தானதானதன தானதனதான

Lyrics

சூதுகொலை கார ராசைபண மாதர்தூவையர்கள் சோகைமுகநீலர்

சூலைவலி வாத மோடளைவர் பாவர்தூமையர்கள் கோளர்தெருவூடே

சாதனைகள் பேசி வாருமென நாழிதாழிவிலை கூறிதெனவோதி

சாயவெகு மாய தூளியுற வாகதாடியிடு வோர்களுறவாமோ

வேதமுநி வோர்கள் பாலகர்கள் மாதர்வேதியர்கள் பூசலெனஏகி

வீறசுரர் பாறி வீழஅலை யேழுவேலையள றாகவிடும்வேலா

நாதரிட மேவு மாதுசிவ காமிநாரியபி ராமியருள்பாலா

நாரண சுவாமி யீனுமக ளோடுஞானமலை மேவுபெருமாளே.

All songs →