Song 610
மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2தனதன தனத்த தான தனதன தனத்த தானதனதன தனத்த தானதனதான
Lyrics
மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோகமகளிரு நகைக்க தாதைதமரோடும்
மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்வசைமொழி பிதற்றி நாளுமடியேனை
அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடினகமதை யெடுத்த சேமமிதுவோவென்
றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போதுமணுகிமு னளித்த பாதமருள்வாயே
தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணைதமருக மறைக்கு ழாமுமலைமோதத்
தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறுசமரிடை விடுத்த சோதிமுருகோனே
எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாதஎழுதரிய பச்சை மேனியுமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாகஇலகிய சசிப்பெண் மேவுபெருமாளே.
