Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 608

மாகசஞ் சாரமுகில் தோற்ற குழல்கொடு

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தானனந் தானதன தாத்த தனதனதானனந் தானதன தாத்த தனதனதானனந் தானதன தாத்த தனதனதந்ததான

Lyrics

மாகசஞ் சாரமுகில் தோற்ற குழல்கொடுபோகஇந்த் ராதிசிலை தோற்ற நுதல்கொடுமானவண் டேறுகணை தோற்ற விழிகொடுகண்டுபோல

மாலர்கொண் டாடுகனி தோற்ற இதழ்கொடுசோலைசென் று஡துகுயில் தோற்ற இசைகொடுவார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடுமன்றுளாடி

சீகரம் பேணுதுடி தோற்ற இடைகொடுபோகபண் டாரபணி தோற்ற அரைகொடுதேனுகுஞ் சீர்கதலி தோற்ற தொடைகொடுவந்துகாசு

தேடுகின் றாரொடுமெய் தூர்த்த னெனவுறவாடுகின் றேனைமல நீக்கி யொளிதருசீவனொன் றானபர மார்த்த தெரிசனைவந்துதாராய்

வேகமுண் டாகியுமை சாற்று மளவினில்மாமகங் கூருமது தீர்க்க வடிவுடைவீரனென் பானொருப ராக்ர னெனவரஅன்றுசோமன்

மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுகஆனுகுந் தீகையற சேட்ட விதிதலைவீழநன் பாரதியு மூக்கு நழுவிடவந்தமாயன்

ஏகநின் றாகியமர் தோற்று வதறிடவேகவுங் காரமொடு ஆர்க்க அலகைகள்ஏறிவென் றாடுகள நீக்கி முநிவரர்வந்துசேயென்

றீசநண் பானபுரு ஷார்த்த தெரிசனைதாவெனுங் கேள்விநெறி கீர்த்தி மருவியராசகெம் பீரவள நாட்டு மலைவளர்தம்பிரானே.

All songs →