Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 60

தகரநறை பூண்ட விந்தைக்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனன தாந்த தந்தத்தனதனன தாந்த தந்தத்தனதனன தாந்த தந்தத்தனதான

Lyrics

தகரநறை பூண்ட விந்தைக்குழலியர்கள் தேய்ந்த இன்பத்தளருமிடை யேந்து தங்கத்தனமானார்

தமைமனதில் வாஞ்சை பொங்கக்கலவியொடு சேர்ந்து மந்த்ரச்சமயஜெப நீங்கி யிந்தப்படிநாளும்

புகலரிய தாந்த்ரி சங்கத்தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப்புவியதனில் வாழ்ந்து வஞ்சித்துழல்மூடர்

புநிதமிலி மாந்தர் தங்கட்புகழ்பகர்தல் நீங்கி நின்பொற்புளகமலர் பூண்டு வந்தித்திடுவேனோ

தகுடதகு தாந்த தந்தத்திகுடதிகு தீந்த மிந்தித்தகுகணக தாங்க ணங்கத்தனதான

தனனதன தாந்த னந்தத்தெனநடன மார்ந்த துங்கத்தனிமயிலை யூர்ந்த சந்தத்திருமார்பா

திசையசுரர் மாண்ட ழுந்தத்திறலயிலை வாங்கு செங்கைச்சிமையவரை யீன்ற மங்கைக்கொருபாலா

திகழ்வயிர மேந்து கொங்கைக்குறவனிதை காந்த சந்த்ரச்சிகரமுகி லோங்கு செந்திற்பெருமாளே.

All songs →