Song 561
வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
- Sthalam
- திருசிராப்பள்ளி
- Raagam
- பூர்வி கல்யாணி
- Thalam
- அங்கதாளம் (6 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதிமிதக-3, தகிட-1 1/2, தகதிமி-2தானத்தத் தான தானன தானத்தத் தான தானனதானத்தத் தான தானனதந்ததான
Lyrics
வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாததுவாய்விட்டுப் போசொ ணாததுநெஞ்சினாலே
மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாததுமாயைக்குச் சூழொ ணாததுவிந்துநாத
ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானதுலோகத்துக் காதி யானதுகண்டுநாயேன்
யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினியூனத்தைப் போடி டாதுமயங்கலாமோ
ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமயலாகிப்பொற் பாத மேபணிகந்தவேள
ஆலித்துச் சேல்கள் பாய்வய லுரத்திற் காள மோடடராரத்தைப் பூண்ம யூரதுரங்கவீரா
நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்நாடிற்றுக் காணொ ணாதெனநின்றநாதா
நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலைநாதர்க்குச் சாமி யேசுரர்தம்பிரானே.
