Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 560

பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தந்த தனதன தந்ததனதன தந்ததனதான

Lyrics

பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள்புழுககில் சந்துபனிநீர்தோய்

புளகித கொங்கை யிளகவ டங்கள்புரளம ருங்கிலுடைசோர

இருள்வளர் கொண்டை சரியஇ சைந்துஇணைதரு பங்கஅநுராகத்

திரிதலொ ழிந்து மனதுக சிந்துனிணையடி யென்றுபுகழ்வேனோ

மருள்கொடு சென்று பரிவுட னன்றுமலையில்வி ளைந்ததினைகாவல்

மயிலை மணந்த அயிலவ எங்கள்வயலியில் வந்தமுருகோனே

தெருளுறு மன்பர் பரவ விளங்குதிரிசிர குன்றில்முதனாளில்

தெரிய இருந்த பெரியவர் தந்தசிறியவ அண்டர்பெருமாளே.

All songs →