Song 559
பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள்
- Sthalam
- திருசிராப்பள்ளி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தாத்தன தானா தானனதனன தாத்தன தானா தானனதனன தாத்தன தானா தானனதந்ததான
Lyrics
பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள்பரிவு போற்புணர் க்ணடா பீடிகள்புருஷர் கோட்டியில் நாணா மோடிகள்கொங்கைமேலே
புடைவை போட்டிடு மாயா ரூபிகள்மிடிய ராக்குபொ லர்மு தேவிகள்புலையர் மாட்டும றாதே கூடிகள்நெஞ்சமாயம்
கருதொ ணாப்பல கோடா கோடிகள்விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள்கலவி சாத்திர நூலே யோதிகள்தங்களாசைக்
கவிகள் கூப்பிடு மோயா மாரிகள்அவச மாக்கிடு பேய்நீ ரூணிகள்கருணை நோக்கமி லாமா பாவிகளின்பமாமோ
குருக டாக்ஷக லாவே தாகமபரம வாக்கிய ஞானா சாரியகுறைவு தீர்த்தருள் ஸ்வாமி கார்முகவன்பரான
கொடிய வேட்டுவர் கோகோ கோவெனமடிய நீட்டிய கூர்வே லாயுதகுருகி க்ஷேத்ரபு ரேசா வாசுகிஅஞ்சமாறும்
செருப ராக்ரம கேகே வாகனசரவ ணோற்பவ மாலா லாளிததிரள்பு யாத்திரி யீரா றாகியகந்தவேளே
சிகர தீர்க்கம காசீ கோபுரமுகச டாக்கர சேணா டாக்ருததிரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள்தம்பிரானே.
