Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 558

புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக்

Thalam
ஆதி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் தனனத் தனனத்தனதான

Lyrics

புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக்கருவிற் பவமுற் றுவிதிப் படியிற்புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித்திடிலாவி

புரியட் டகமிட் டதுகட் டியிறுக்கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப்புரள்வித் துவருத் திமணற் சொரிவித்தனலு஡டே

தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத்தழுவப் பணிமுட் களில்கட் டியிசித்திடவாய்கண்

சலனப் படஎற் றியிறைச் சியறுத்தயில்வித் துமுரித் துநெரித் துளையத்தளையிட் டுவருத் தும்யமப் ரகரத்துயர்தீராய்

பவனத் தையொடுக் குமனக் கவலைப்ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற்படரிச் சையொழித் ததவச் சரியைக்க்ரியையோகர்

பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற்பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற்பரவப் படுசெய்ப் பதியிற் பரமக்குருநாதா

சிவனுத் தமனித் தவுருத் திரன்முக்கணனக் கன்மழுக் கரனுக் ரரணத்த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற்குணணாதி

செகவித் தனிசப் பொருள்சிற் பரனற்புதனொப் பிலியுற் பவபத் மதடத்த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப்பெருமாளே.

All songs →