Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 562

வெருட்டி யாட்கொளும் விடமிகள் புடைவையை

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்த தாத்தன தனதன தனதனதனத்த தாத்தன தனதன தனதனதனத்த தாத்தன தனதன தனதனதனதான

Lyrics

வெருட்டி யாட்கொளும் விடமிகள் புடைவையைநெகிழ்த்த ணாப்பிகள் படிறிகள் சடுதியில்விருப்ப மாக்கிகள் விரவிய திரவியமிலரானால்

வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடுபதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமளவிசித்ர மேற்படு முலையினு நிலையினுமெவரோடும்

மருட்டி வேட்கைசொல் மொழியினும் விழியினும்அவிழ்த்த பூக்கமழ் குழலினு நிழலினுமதிக்கொ ணாத்தள ரிடையினு நடையினுமவமேயான்

மயக்க மாய்ப்பொருள் வரும்வகை க்ருஷிபணுதடத்து மோக்ஷம தருளிய பலமலர்மணத்த வார்க்கழல் கனவிலு நனவிலுமறவேனே

இருட்டி லாச்சுர ருலகினி லிலகியசகஸ்ர நேத்திர முடையவன் மிடியறஇரக்ஷை வாய்த்தருள் முருகப னிருகரகுகவீரா

இலக்ஷு மிச்சுர பசுபதி குருபரசமஸ்த ராச்சிய ந்ருபபுகழ் வயமியல்இலக்க ரேய்ப்படை முகடெழு ககபதிகளிகூரத்

திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபடஎடுத்த வேற்கொடு கடுகிய முடுகியசெருக்கு வேட்டுவர் திறையிட முறையிடமயிலேறும்

செருப்ப ராக்ரம நிதிசர வணபவசிவத்த பாற்கர னிமகரன் வலம்வருதிருச்சி ராப்பளி மலைமிசை நிலைபெறுபெருமாளே.

All songs →