Song 531
ஐயுமுறு நோயு மையலும வாவி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தய்யதன தான தய்யதன தானதய்யதன தானத்தனதான
Lyrics
ஐயுமுறு நோயு மையலும வாவினைவருமு பாயப்பலநூலின்
அள்ளல்கட வாது துள்ளியதில் மாயுமுள்ளமுமில் வாழ்வைக்கருதாசைப்
பொய்யுமக லாத மெய்யைவள ராவிஉய்யும்வகை யோகத்தணுகாதே
புல்லறிவு பேசி யல்லல் படு வேனைநல்லஇரு தாளிற்புணர்வாயே
மெய்யபொழில் நீடு தையலைமு நாலுசெய்யபுய மீதுற்றணைவோனே
வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழவெள்ளமுது மாவைப்பொருதோனே
வையமுழு தாளு மையமயில் வீரவல்லமுரு காமுத்தமிழ்வேளே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவுவள்ளிமண வாளப்பெருமாளே.
