Song 532
கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்து
- Sthalam
- வள்ளிமலை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்ததய்யத்த தான தந்ததனதான
Lyrics
கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்துபொய்யொத்த வாழ்வு கண்டுமயலாகிக்
கல்லுக்கு நேரும் வஞ்ச வுள்ளத்தர் மேல்வி ழுந்துகள்ளப்ப யோத ரங்களுடன்மேவி
உய்யப்ப டாமல் நின்று கையர்க்கு பாய மொன்றுபொய்யர்க்கு மேய யர்ந்துளுடைநாயேன்
உள்ளப்பெ றாக நின்று தொய்யப்ப டாம லென்றுமுள்ளத்தின் மாய்வ தொன்றைமொழியாயோ
ஐயப்ப டாத ஐந்து பொய்யற்ற சோலை தங்குதெய்வத்தெய் வானை கொங்கைபுணர்வோனே
அல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்றுவெல்லப்ப தாகை கொண்டதிறல்வேலா
வையத்தை யோடி யைந்து கையற்கு வீசு தந்தைமெய்யொத்த நீதி கண்டபெரியோனே
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்றுவள்ளிக்கு வேடை கொண்டபெருமாளே.
