Song 53
கொம்பனை யார்காது மோதிரு
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- கரஹரப்ரியா
- Thalam
- சதுஸ்ர ரூபகம் (6) (ஏடுப்பு 3/4 இடம்)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தன தானான தானனதந்தன தானான தானனதந்தன தானான தானனதனதான
Lyrics
கொம்பனை யார்காது மோதிருகண்களி லாமோத சீதளகுங்கும பாடீர பூஷணநகமேவு
கொங்கையி னீராவி மேல்வளர்செங்கழு நீர்மாலை சூடியகொண்டையி லாதார சோபையில்மருளாதே
உம்பர்கள் ஸ்வாமி நமோநமஎம்பெரு மானே நமோநமஒண்டொடி மோகா நமோநமஎனநாளும்
உன்புக ழேபாடி நானினிஅன்புட னாசார பூசைசெய்துய்ந்திட வீணாள்ப டாதருள்புரிவாயே
பம்பர மேபோல ஆடியசங்கரி வேதாள நாயகிபங்கய சீபாத நூபுரிகரசூலி
பங்கமி லாநீலி மோடிபயங்கரி மாகாளி யோகினிபண்டுசு ராபான சூரனொடெதிர்போர்கண்
டெம்புதல் வாவாழி வாழியெனும்படி வீறான வேல்தரஎன்றுமு ளானேம நோகரவயலுரா
இன்சொல்வி சாகாக்ரு பாகரசெந்திலில் வாழ்வாகி யேயடியென்றனை யீடேற வாழ்வருள்பெருமாளே.
