Song 54
கொலைமத கரியன ம்ருகமத தனகிரி
- Sthalam
- திருச்செந்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனதன தனதன தனதந்தத்தனதானா
Lyrics
கொலைமத கரியன ம்ருகமத தனகிரிகும்பத்தனமானார்
குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்கொண்டுற்றிடுநாயேன்
நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழிநின்றுற்றிடவேதான்
நினதிரு வடிமல ரிணைமன தினிலுறநின்பற்றடைவேனோ
சிலையென வடமலை யுடையவர் அருளியசெஞ்சொற்சிறுபாலா
திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்தசெந்திற்பதிவேலா
விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்விரும்பிப்புணர்வோனே
விருதணி மரகத மயில்வரு குமரவிடங்கப்பெருமாளே.
