Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 52

கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதனன தனதனன தந்தனந் தந்தனம்தனதனன தனதனன தந்தனந் தந்தனம்தனதனன தனதனன தந்தனந் தந்தனம்தந்ததானா

Lyrics

கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங்குமுதஅமு திதழ்பருகி யின்புறுஞ் சங்கையன்குலவியணை முகிலளக முஞ்சரிந் தன்பினின்பண்புலாவக்

கொடியவிரல் நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன்குனகியவ ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளங்குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந்தொன்றுபாய்மேல்

விடமனைய விழிமகளிர் கொங்கையின் பன்புறும்வினையனியல் பரவுமுயிர் வெந்தழிந் தங்கமும்மிதமொழிய அறிவில்நெறி பண்பிலண் டுஞ்சகன்செஞ்செநீடும்

வெகுகனக வொளிகுலவும் அந்தமன் செந்திலென்றவிழவுள முருகிவரும் அன்பிலன் தந்திலன்விரவுமிரு சிறுகமல பங்கயந் தந்துகந்தன்புறாதோ

படமிலகும் அரவினுடல் அங்கமும் பங்கிடந்துதறுமொரு கலபிமிசை வந்தெழுந் தண்டர்தம்பகையசுர ரனைவருடல் சந்துசந் துங்கதஞ்சிந்தும்வேலா

படியவரும் இமையவரும் நின்றிறைஞ் செண்குணன்பழையஇறை யுருவமிலி அன்பர்பங் கன்பெரும்பருவரல்செய் புரமெரிய விண்டிடுஞ் செங்கணண்கங்கைமான்வாழ்

சடிலமிசை அழகுபுனை கொன்றையும் பண்புறுந்தருணமதி யினகுறைசெய் துண்டமுஞ் செங்கையொண்சகலபுவ னமுமொழிக தங்குறங் கங்கியும்பொங்கிநீடும்

சடமருவு விடையரவர் துங்கஅம் பங்கினின்றுலகுதரு கவுரியுமை கொங்கைதந் தன்புறுந்தமிழ்விரக உயர்பரம சங்கரன் கும்பிடுந்தம்பிரானே.

All songs →