Song 524
கறுத்ததலை வெளிறு மிகுந்து
- Sthalam
- திருவேங்கடம்
- Raagam
- முகாரி
- Thalam
- அங்கதாளம் (6 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகதிமிதக-3, தகதிமி-2, தகிட-1 1/2தனத்ததன தனதன தனந்ததனத்ததன தனதன தனந்ததனத்ததன தனதன தனந்ததனதான
Lyrics
கறுத்ததலை வெளிறு மிகுந்துமதர்த்த இணை விழிகள் குழிந்துகதுப்பிலுறு தசைகள் வறண்டுசெவிதோலாய்க்
கழுத்தடியு மடைய வளைந்துகனத்தநெடு முதுகு குனிந்துகதுப்புறுப லடைய விழுந்துதடுநீர்சோர்
உறக்கம்வரு மளவி லெலும்புகுலுக்கிவிடு மிருமல் தொடங்கிஉரத்தகன குரலு நெரிந்துதடிகாலாய்
உரத்தநடை தளரு முடம்புபழுத்திடுமுன் மிகவும் விரும்பிஉனக்கடிமை படுமவர் தொண்டுபுரிவேனோ
சிறுத்தசெலு வதன ளிருந்துபெருத்ததிரை யுததி கரந்துசெறித்தமறை கொணர நிவந்தஜெயமாலே
செறித்தவளை கடலில் வரம்புபுதுக்கியிளை யவனோ டறிந்துசெயிர்த்தஅநு மனையு முகந்துபடையோடி
மறப்புரிசை வளையு மிலங்கையரக்கனொரு பதுமுடி சிந்தவளைத்தசிலை விஜய முகுந்தன்முருகோனே
மலர்க்கமல வடிவுள செங்கைஅயிற்குமர குகைவழி வந்தமலைச்சிகர வடமலை நின்றபெருமாளே.
