Song 523
ஒருபது மிருபது மறுபது முடனறு
- Sthalam
- ஸ்ரீ சைலம் திருமலை
- Raagam
- பிலஹரி
- Thalam
- ஆதி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
(எடுப்பு - 1/2 இடம்)தனதன தனதன தனதன தனதனதனதன தனதனதனதான
Lyrics
ஒருபது மிருபது மறுபது முடனறுமுணர்வுற இருபதமுளநாடி
உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்வெளியொடு வொளிபெறவிரவாதே
தெருவினில் மரமென எவரொடு முரைசெய்துதிரிதொழி லவமதுபுரியாதே
திருமகள் மருவிய திரள்புய அறுமுகதெரிசனை பெறஅருள்புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்பயறொடு சிலவகைபணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழிஎழுதிய கணபதியிளையோனே
பெருமலை யுருவிட அடியவ ருருகிடபிணிகெட அருள்தருகுமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்பிணையமர் திருமலைபெருமாளே.
