Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 522

முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்தத் தனத்த தத்த தனத்தத் தனத்த தத்ததனத்தத் தனத்த தத்ததனதான

Lyrics

முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்நமுலைக்கச் சவிழ்த்த சைத்துமுசியாதே

முழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்துமொழிக்குட் படுத்த ழைத்தமளிமீதே

நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்தநயத்திற் கழுத்தி றுக்கியணைவார்பால்

நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்துநயத்துக் தியக்கி நித்தமழிவேனோ

செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்கதிமித்தித் திமித்தி தித்தியெனஆடும்

செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்தஜெனத்துக் கினித்த சித்தியருள்வோனே

மிசைத்துத் திடத்தொ டுற்று அசைத்துப் பொறுத்த ரக்கன்மிகுத்துப் பெயர்த்தெ டுத்தகயிலாய

மிசைக்குற் றடுத்து மற்ற பொருப்பைப் பொடித்தி டித்துமிதித்துத் துகைத்து விட்டபெருமாளே.

All songs →