Song 525
சரவண பவநிதி யறுமக குருபர
- Sthalam
- திருவேங்கடம்
- Raagam
- பிருந்தாவன ஸாரங்கா
- Thalam
- ஆதி
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
(எடுப்பு - 1/2 இடம்)தனதன தனதன தனதன தனதனதனதன தனதன தனதன தனதனதனதன தனதன தனதன தனதனதனதான
Lyrics
சரவண பவநிதி யறுமக குருபரசரவண பவநிதி யறுமக குருபரசரவண பவநிதி யறுமக குருபரஎனவோதித்
தமிழினி லுருகிய வடியவ ரிடமுறுசனனம ரணமதை யொழிவுற சிவமுறதருபிணி துளவர மெமதுயிர் சுகமுறவருள்வாயே
கருணைய விழிபொழி யொருதனி முதலெனவருகரி திருமுகர் துணைகொளு மிளையவகவிதைய முதமொழி தருபவ ருயிர்பெறவருள்நேயா
கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்கலகமி னையதுள கழியவும் நிலைபெறகதியுமு னதுதிரு வடிநிழல் தருவதுமொருநாளே
திரிபுர மெரிசெயு மிறையவ ரருளியகுமரச மரபுரி தணிகையு மிகுமுயர்சிவகிரி யிலும்வட மலையிலு முலவியவடிவேலா
தினமுமு னதுதுதி பரவிய அடியவர்மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவதிமிரம லமொழிய தினகர னெனவருபெருவாழ்வே
அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்மருகனெ னவெவரு மதிசய முடையவஅமலிவி மலிபரை உமையவ ளருளியமுருகோனே
அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவெனவருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுறஅழகினு லனமரு மரகர சிவசிவபெருமாளே.
