Song 503
தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகை
- Sthalam
- சிதம்பரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தத்ததன தானதன தானதன தானதனதத்ததன தானதன தானதன தானதனதத்ததன தானதன தானதன தானதனதனதான
Lyrics
தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகையிட்டுமுட னாணிமுலை மீதுதுகில் மூடியவர்சற்றவிடம் வீடுமினி வாருமென வோடிமடிபிடிபோல
தைச்சரச மோடுறவெ யாடியக மேகொடுபொயெத்தியணை மீதிலிது காலமெனிர் போவதெனதட்டுபுழு கோடுபனி நீர்பலச வாதையவருடல்பூசி
வைத்துமுக மோடிரச வாயிதழி னுறல்பெருகக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதறவட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகியுடைசோர
மச்சவிழி பூசலிட வாய்புலியு லாசமுடனொப்பியிரு வோருமயல் மூழ்கியபின் ஆபரணம்வைத்தடகு தேடுபொருள் சூறைகொளு வார்கலவிசெயலாமோ
சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுகநித்தியகல் யாணியெனை யீணமலை மாதுசிவைதற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமையருள்பாலா
சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபடரத்நமயி லேறிவிளை யாடியசு ராரைவிழசத்தியினை யேவிஅம ரோர்கள்சிறை மீளநடமிடுவோனே
துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகுசித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியைசுத்தஅணை யூடுவட மாமுலைவி டாதகரமணிமார்பா
சுத்தவம காதவசி காமணியெ னோதுமவர்சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுகசுப்ரமணி யாபுலியுர் மேவியுறை தேவர்புகழ்பெருமாளே.
