Song 502
சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதனன தனதான தனதனன தனதானதனதனன தனதானதனதான
Lyrics
சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞானசொருபகிரி யிடமேவுமுகமாறும்
சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாயதுகிரிதழின் மொழிவேதமணம்வீச
அடர்பவள வொளிபாய அரியபரி புரமாடஅயில்தரமொ டெழில்தோகைமயிலேறி
அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரைஅதிசயமெ னருள்பாடவரவேணும்
விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோடமிடறடைய விடம்வாரியருள்நாதன்
மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்மிகமகிழ அநுபூதியருள்வோனே
இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதினிணையிளநிர் முலைமார்பினணைமார்பா
இனியமுது புலிபாத னுடனரவு சதகோடியிருடியர்கள் புகழ்ஞானபெருமாளே.
