Song 501
சாந்துட னேபுழுகு தோய்ந்தழ கார்குழலை
- Sthalam
- சிதம்பரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தாந்தன தானதன தாந்தன தானதனதாந்தன தானதனதனதான
Lyrics
சாந்துட னேபுழுகு தோய்ந்தழ கார்குழலைமோந்துப யோதரமதணையாகச்
சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்த நுராகசுககாந்தமொ டூசியெனமடவார்பால்
கூர்ந்தக்ரு பாமனது போந்துன தாள்குறுகிஓர்ந்துண ராவுணர்விலடிநாயேன்
கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணைபூண்டுற வாடுதினமுளதோதான்
பாந்தளின் மீதினிதி னோங்குக ணேதுயில்கொள்நீண்டிடு மாலொடயனறியாது
பாம்புரு வானமுநி வாம்புலி யானபதன்ஏய்ந்தெதிர் காணநடமிடுபாதர்
பூந்துணர் பாதிமதி வேய்ந்தச டாமகுடமாங்கன காபுரியிலமர்வாழ்வே
பூங்கமு கார்வுசெறி யூங்கந காபுரிசைசூழ்ம்புலி யூரிலுறைபெருமாளே.
