Song 500
சகுடமுந்துங் கடலடைந்துங்
- Sthalam
- சிதம்பரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனதந்தம் தனனதந்தம்தனனதந்தம் தானந்தம்------ 3 முறை ------தனதான
Lyrics
சகுடமுந்துங் கடலடைந்துங்குளமகிழ்ந்துந் தோய்சங்கங்கமுகடைந்தண் டமுதகண்டந்தரளகந்தந் தேர்கஞ்சஞ்சரமெனுங்கண் குமிழதுண்டம்புருவெனுஞ்செஞ் சாபம்பொன்திகழ்மாதர்
சலசகெந்தம் புழுகுடன்சண்பகமணங்கொண் டேய்ரண்டந்தனகனம்பொன் கிரிவணங்கும்பொறிபடுஞ்செம் பேர்வந்தண்சலனசம்பொன் றிடைபணங்கின்கடிதடங்கொண் டாரம்பொன்தொடர்பாவை
புகலல்கண்டஞ் சரிகரம்பொன்சரணபந்தந் தோதிந்தம்புரமுடன்கிண் கிணிசிலம்பும்பொலியலம்புந் தாள்ரங்கம்புணர்வணைந்தண் டுவரொடுந்தொண்டிடர்கிடந்துண் டேர்கொஞ்சுங்கடைநாயேன்
புகழடைந்துன் கழல்பணிந்தொண்பொடியணிந் தங்காநந்தம்புனல்படிந்துண் டவசமிஞ்சுந்தவசர்சந்தம் போலுந்திண்புவனிகண்டின் றடிவணங்குஞ்செயல்கொளஞ்செஞ் சீர்செம்பொன்கழல்தாராய்
திகுடதிந்திந் தகுடதந்தந்திகுடதிந்திந் தோதிந்தம்டகுடடண்டண் டிகுடடிண்டிண்டகுடடண்டண் டோ டிண்டிண்டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண்டிமுடடிண்டென் றேசங்கம்பலபேரி
செககணஞ்சஞ் சலிகைபஞ்சம்பறைமுழங்கும் போரண்டஞ்சிலையிடிந்துங் கடல்வடிந்தும்பொடிபறந்துண் டோ ர்சங்கஞ்சிரமுடைந்தண் டவுணரங்கம்பிணமலைந்தன் றாடுஞ்செங்கதிர்வேலா
அகிலஅண்டஞ் சுழலஎங்கும்பவுரிகொண்டங் காடுங்கொன்புகழ்விளங்குங் கவுரிபங்கன்குருவெனுஞ்சிங் காரங்கொண்டறுமுகம்பொன் சதிதுலங்குந்திருபதங்கந் தாஎன்றென்றமரோர்பால்
அலர்பொழிந்தங் கரமுகிழ்ந்தொண்சரணமுங் கொண் டோ தந்தம்புனைகுறம்பெண் சிறுமியங்கம்புணர்செயங்கொண் டேயம்பொன்அமைவிளங்கும் புலிசரம்பொன்திருநடங்கொண் டார்கந்தம்பெருமாளே.
