Song 484
தாது மாமலர் முடியா லேபத
- Sthalam
- சிதம்பரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தான தானன தனனா தானனதான தானன தனனா தானனதான தானன தனனா தானனதனதான
Lyrics
தாது மாமலர் முடியா லேபதறாத நூபுர அடியா லேகரதாள மாகிய நொடியா லேமடிபிடியாலே
சாடை பேசிய வகையா லேமிகுவாடை பூசிய நகையா லேபலதாறு மாறுசொல் மிகையா லேயனநடையாலே
மோதி மீறிய முலையா லேமுலைமீதி லேறிய கலையா லேவெகுமோடி நாணய விலையா லேமயல்தருமானார்
மோக வாரிதி தனிலே நாடொறுமூழ்கு வேனுன தடியா ராகியமோன ஞானிக ளுடனே சேரவுமருள்வாயே
காத லாயருள் புரிவாய் நான்மறைமூல மேயென வுடனே மாகரிகாண நேர்வரு திருமால் நாரணன்மருகோனே
காதல் மாதவர் வலமே சூழ்சபைநாத னார்தம திடமே வாழ்சிவகாம நாயகி தருபா லாபுலிசையில்வாழ்வே
வேத நூன்முறை வழுவா மேதினம்வேள்வி யாலெழில் புநன்மு வாயிரமேன்மை வேதியர் மிகவே பூசனைபுரிகோவே
வீறு சேர்வரை யரசாய் மேவியமேரு மால்வரை யெனநீள் கோபுரமேலை வாயிலின் மயில்மீ தேறியபெருமாளே.
