Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 483

கொள்ளை யாசைக் காரிகள் பாதக

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தய்ய தானத் தானன தானனதய்ய தானத் தானன தானனதய்ய தானத் தானன தானனதனதான

Lyrics

கொள்ளை யாசைக் காரிகள் பாதகவல்ல மாயக் காரிகள் சூறைகள்கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள்விழியாலே

கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்வெல்லு மோகக் காரிகள் சூதுசொல்கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழுமவர்போலே

உள்ள நோவைத் தேயுற வாடியர்அல்லை நேரோப் பாமன தோஷிகள்உள்வி ரோதக் காரிகள் மாயையிலுழல்நாயேன்

உய்ய வேபொற் றோள்களும் ஆறிருகையு நீபத் தார்முக மாறுமுன்உள்ள ஞானப் போதமு நீதரவருவாயே

கள்ள மாயத் தாருகன் மாமுடிதுள்ள நீலத் தோகையின் மீதொருகையின் வேல்தொட் டேவிய சேவகமுருகோனே

கல்லி லேபொற் றாள்பட வேயதுநல்ல ரூபத் தேவர கானிடைகெளவை தீரப் போகுமி ராகவன்மருகோனே

தெள்ளி யேமுற் றீரமு னோதியசொல்வ ழாமற் றானொரு வானுறுசெல்வி மார்பிற் பூஷண மாயணைமணவாளா

தெள்ளு மேனற் சூழ்புன மேவியவள்ளி வேளைக் காரம னோகரதில்லை மேலைக் கோபுர மேவியபெருமாளே.

All songs →