Song 482
காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற
- Sthalam
- சிதம்பரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானத் தான தத்த தானத் தான தத்ததானத் தான தத்ததனதான
Lyrics
காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்றகாமப் பூச லிட்டுமதியாதே
காரொத் தேய்நி றத்த வோதிக் காவனத்தினீழற் கேத ருக்கிவிளையாடிச்
சேதித் தேக ருத்தை நேருற்றேபெ ருத்தசேலொத் தேவ ருத்தும்விழிமானார்
தேமற் பார வெற்பில் மூழ்கித் தாப மிக்கதீமைக் காவி தப்பநெறிதாராய்
மாதைக் காத லித்து வேடக் கான கத்துவாசத் தாள்சி வப்பவருவோனே
வாரிக் கேயொ ளித்த மாயச் சூரை வெட்டிமாளப் போர்தொ லைத்தவடிவேலா
வீதித் தேர்ந டத்து தூளத் தால ருக்கன்வீரத் தேர்ம றைத்தபுலியூர்வாழ்
மேலைக் கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்கவேதத் தோர்து தித்தபெருமாளே.
