Song 481
ஆரத் தோடணி மார்பிணை யானைகள்
- Sthalam
- சிதம்பரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானத் தானன தானன தானனதானத் தானன தானன தானனதானத் தானன தானன தானனதனதான
Lyrics
ஆரத் தோடணி மார்பிணை யானைகள்போருக் காமென மாமுலை யேகொடுஆயத் தூசினை மேவிய நூலிடைமடமாதர்
ஆலைக் கோதினி லீரமி லாமனநேசத் தோடுற வானவர் போலுவர்ஆருக் கேபொரு ளாமென வேநினைவதனாலே
காருக் கேநிக ராகிய வோதியமாழைத் தோடணி காதொடு மோதியகாலத் தூதர்கை வேலெனு நீள்விழிவலையாலே
காதற் சாகர மூழ்கிய காமுகர்மேலிட் டேயெறி கீலிகள் நீலிகள்காமத் தோடுற வாகையி லாவருள்புரிவாயே
சூரர்க் கேயொரு கோளரி யாமெனநீலத் தோகைம யூரம தேறியதூளிக் கேகடல் தூரநி சாசரர்களமீதே
சோரிக் கேவெகு ரூபம தாவடுதானத் தானன தானன தானனசூழிட் டேபல சோகுக ளாடவெபொரும்வேலா
வீரத் தால்வல ராவண னார்முடிபோகத் தானொரு வாளியை யேவியமேகத் தேநிக ராகிய மேனியன்மருகோனே
வேதத் தோன்முத லாகிய தேவர்கள்பூசித் தேதொழ வாழ்புலி யூரினில்மேலைக் கோபுர வாசலில் மேவியபெருமாளே.
