Song 485
எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை
- Sthalam
- சிதம்பரம்
- Raagam
- சிந்து பைரவி
- Thalam
- ஆதி (எடுப்பு - 1/2 இடம்)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனத்தத் தானன தானன தானனதனத்தத் தானன தானன தானனதனத்தத் தானன தானன தானனதந்ததான
Lyrics
எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடைஇறுக்குச் சீபுழு வோடடை மூளைகள்இரத்தச் சாகர நீர்மல மேவியகும்பியோடை
இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலிஉளைப்புச் சூலையொ டேவலு வாகியஇரைப்புக் கேவல மூலவி யாதியொடண்டவாதங்
குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொடளைப்புக் காதடை கூனல்வி சூசிகைகுருட்டுக் கால்முட மூமையு ளூடறுகண்டமாலை
குடிப்புக் கூனமி தேசத மாமெனஎடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனுனிடத்துத் தாள்பெற ஞானச தாசிவஅன்புதாராய்
கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமிழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்படகண்டவேலா
கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெயசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரிகிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகிபங்கின்மேவும்
வலித்துத் தோள்மலை ராவண னானவன்எடுத்தப் போதுடல் கீழ்விழ வேசெய்துமகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅரசம்புபாலா
மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினைஅணைத்துச் சீர்புலி யூர்பர மாகியவடக்குக் கோபுர வாசலில் மேவியதம்பிரானே.
