Song 474
கரிய மேக மெனுங்குழ லார்பிறை
- Sthalam
- சிதம்பரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தான தனந்தன தானனதனன தான தனந்தன தானனதனன தான தனந்தன தானனதந்ததான
Lyrics
கரிய மேக மெனுங்குழ லார்பிறைசிலைகொள் வாகு வெனும்புரு வார்விழிகயல்கள் வாளி யெனுஞ்செய லார்மதிதுண்டமாதர்
கமுக க்ணவர் புயங்கழை யார்தனமலைக ளாஇணை யுங்குவ டார்கரகமல வாழை மனுந்தொடை யார்சரசுங்கமாடை
வரிய பாளித முந்துடை யாரிடைதுடிகள் நூலிய லுங்கவி னாரல்குல்மணமு லாவிய ரம்பையி னார்பொருள்சங்கமாதர்
மயில்கள் போல நடம்புரி வாரியல்குணமி லாத வியன்செய லார்வலைமசகி நாயெ னழிந்திட வோவுனதன்புதாராய்
சரியி லாத சயம்பவி யார்முகிலளக பார பொனின்சடை யாள்சிவைசருவ லோக சவுந்தரி யாளருள்கந்தவேளே
சதப ணாம குடம்பொடி யாய்விடஅவுணர் சேனை மடிந்திட வேயொருதழல்கொள் வேலை யெறிந்திடு சேவகசெம்பொன்வாகா
அரிய மேனி யிலங்கை யிராவணன்முடிகள் வீழ சரந்தொடு மாயவன்அகில மீரெழு முண்டவன் மாமருகண்டரோதும்
அழகு சோபித அங்கொளு மானனவிபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளிஅருள்கொ டாடி சிதம்பர மேவியதம்பிரானே.
