Song 472
நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தனத் தானதன தந்தனத் தானதனதந்தனத் தானதனதந்ததான
Lyrics
நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களைநம்புதற் றீதெனநினைந்துநாயேன்
நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனைநங்களப் பாசரணமென்றுகூறல்
உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல்உன்சொலைத் தாழ்வுசெய்துமிஞ்சுவாரார்
உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர்உம்பருக் காவதினின்வந்துதோணாய்
கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகுகண்களிப் பாகவிடுசெங்கையோனே
கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவுகஞ்சுகப் பான்மைபுனைபொன்செய்தோளாய்
அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம்அந்தரத் தேறவிடுகந்தவேளே
அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசைஅம்பலத் தாடுமவர்தம்பிரானே.
