Song 471
கட்டி முண்டகர பாலி யங்கிதனை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1தத்த தந்ததன தான தந்ததனதத்த தந்ததன தான தந்ததனதத்த தந்ததன தான தந்ததனதனதான
Lyrics
கட்டி முண்டகர பாலி யங்கிதனைமுட்டி யண்டமொடு தாவி விந்துவொலிகத்த மந்திரவ தான வெண்புரவிமிசையேறிக்
கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர்பட்டி மண்டபமு டாடி யிந்துவொடுகட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொடசையாமற்
கட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடுதத்து வங்கள்விழ சாடி யெண்குணவர்சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபதமுறமேவித்
துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில்வச்சி ரங்களென மேனி தங்கமுறசுத்த கம்புகுத வேத விந்தையொடுபுகழ்வேனோ
எட்டி ரண்டுமறி யாத என்செவியிலெட்டி ரண்டுமிது வாமி லிங்கமெனஎட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுருமுருகோனே
எட்டி ரண்டுதிசை யோட செங்குருதியெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெலெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில்விடுவோனே
செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்கட்டு செங்கைவளை கூறு மெந்தையிடசித்த முங்குளிர நாதி வண்பொருளைநவில்வோனே
செட்டி யென்றுவன மேவி யின்பரசசத்தி யின்செயலி னாளை யன்புருகதெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர்பெருமாளே.
