Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 470

அவகுண விரகனை வேதாள ரூபனை

Thalam
அங்கதாளம் (8 1/2)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தகதிமி-2, தகதிமி-2, தகதகிட-2 1/2, தகதிமி-2(எடுப்பு - 1/2 இடம்)தனதன தனதன தானான தானனதனதன தனதன தானான தானனதனதன தனதன தானான தானனதந்ததான

Lyrics

அவகுண விரகனை வேதாள ரூபனைஅசடனை மசடனை ஆசார ஈனனைஅகதியை மறவனை ஆதாளி வாயனைஅஞ்சுபூதம்

அடைசிய சவடனை மோடாதி மோடனைஅழிகரு வழிவரு வீணாதி வீணனைஅழுகலை யவிசலை ஆறான வூணனைஅன்பிலாத

கவடனை விகடனை நானாவி காரனைவெகுளியை வெகுவித மூதேவி மூடியகலியனை அலியனை ஆதேச வாழ்வனைவெம்பிவீழுங்

களியனை யறிவுரை பேணாத மாநுடகசனியை யசனியை மாபாத னாகியகதியிலி தனையடி நாயேனை யாளுவதெந்தநாளோ

மவுலியி லழகிய பாதாள லோகனுமரகத முழுகிய காகோத ராஜனுமநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுடனும்பர்சேரும்

மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்மடமயில் மகிழ்வுற வானாடர் கோவெனமலைமக ளுமைதரு வாழ்வேம னோகரமன்றுளாடும்

சிவசிவ ஹரஹர தேவா நமோநமதெரிசன பரகதி யானாய் நமோநமதிசையினு மிசையினும் வாழ்வே நமோநமசெஞ்சொல்சேருந்

திருதரு கலவி மணாளா நமோநமதிரிபுர மெரிசெய்த கோவே நமோநமஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர்தம்பிரானே.

All songs →