Song 469
காய மாய வீடு மீறிய கூடு நந்து
- Sthalam
- சிதம்பரம்
- Raagam
- ஹம்ஸாநந்தி
- Thalam
- அங்கதாளம் (19)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2,தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2தான தான தான தானன தான தந்ததத்த தந்த தத்த தந்ததந்ததான
Lyrics
காய மாய வீடு மீறிய கூடு நந்துபுற்பு தந்த னிற்கு ரம்பைகொண்டுநாளுங்
காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரியப்ர மந்த டித்த லைந்துசிந்தைவேறாய்
வேயி லாய தோள மாமட வார்கள் பங்கயத்து கொங்கை யுற்றி ணங்கிநொந்திடாதே
வேத கீத போத மோனமெய் ஞான நந்தமுற்றி டின்ப முத்தி யொன்றுதந்திடாயோ
மாய வீர தீர சூரர்கள் பாற நின்றவிக்ர மங்கொள் வெற்பி டந்தசெங்கைவேலா
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கையைப்பு ணர்ந்த வெற்ப கந்தசெந்தில்வேளே
ஆயும் வேத கீத மேழிசை பாட வஞ்சேழுத்த ழங்க முட்ட நின்றுதுன்றுசோதீ
ஆதி நாத ராடு நாடக சாலை யம்பலச்சி தம்ப ரத்த மர்ந்ததம்பிரானே.
