Song 468
சந்திர வோலைகு லாவ கொங்கைகள்
- Sthalam
- சிதம்பரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்தன தானன தான தந்தனதந்தன தானன தான தந்தனதந்தன தானன தான தந்தனதந்ததான
Lyrics
சந்திர வோலைகு லாவ கொங்கைகள்மந்தர மாலந னீர்த தும்பநல்சண்பக மாலைகு லாவி ளங்குழல்மஞ்சுபோலத்
தண்கயல் வாளிக ணாரி ளம்பிறைவிண்புரு வாரிதழ் கோவை யின்கனிதன்செய லார்நகை சோதி யின்கதிர்சங்குமேவுங்
கந்தரர் தேமலு மார்ப ரம்பநல்சந்தன சேறுட னார்க வின்பெறுகஞ்சுக மாமிட றோதை கொஞ்சியரம்பையாரைக்
கண்களி கூரவெ காசை கொண்டவர்பஞ்சணை மீதுகு லாவி னுந்திருகண்களி ராறுமி ராறு திண்புயமுங்கொள்வேனே
இந்திர லோகமு ளாரி தம்பெறசந்திர சூரியர் தேர்ந டந்திடஎண்கிரி சூரர்கு ழாமி றந்திடகண்டவேலா
இந்திரை கேள்வர்பி தாம கன்கதிரிந்துச டாதரன் வாச வன்தொழுதின்புற வேமனு நூல்வி ளம்பியகந்தவேளே
சிந்துர மால்குவ டார்த னஞ்சிறுபெண்கள்சி காமணி மோக வஞ்சியர்செந்தினை வாழ்வளி நாய கொண்குகஅன்பரோது
செந்தமிழ் ஞானத டாக மென்சிவகங்கைய ளாவு மகாசி தம்பரதிண்சபை மேவும னாச வுந்தரதம்பிரானே.
