Song 467
முகசந்திர புருவஞ்சிலை விழியுங்கயல் நீல
- Sthalam
- சிதம்பரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதந்தன தனதந்தன தனதந்தன தானதனதந்தன தனதந்தன தனதந்தன தானதனதந்தன தனதந்தன தனதந்தன தானத்தனதான
Lyrics
முகசந்திர புருவஞ்சிலை விழியுங்கயல் நீலமுகிலங்குழ லொளிர்தொங்கலொ டிசைவண்டுகள் பாடமொழியுங்கிளி யிதழ்பங்கய நகைசங்கொளி காதிற்குழையாட
முழவங்கர கமுகம்பரி மளகுங்கும வாசமுலையின்பர சகுடங்குவ டிணைகொண்டுநல் மார்பில்முரணுஞ்சிறு பவளந்தர ளவடந்தொடை யாடக்கொடிபோலத்
துகிரின்கொடி யொடியும்படி நடனந்தொடை வாழைமறையும்படி துயல்சுந்தர சுகமங்கைய ரோடுதுதைபஞ்சணை மிசையங்கசன் ரதியின்பம தாகச்செயல்மேவித்
தொடைசிந்திட மொழிகொஞ்சிட அளகஞ்சுழ லாடவிழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண் டணைகீனும்சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக்கருள்வாயே
அகரந்திரு உயிர்பண்புற அரியென்பது மாகிஉறையுஞ்சுட ரொளியென்கணில் வளருஞ்சிவ காமிஅமுதம்பொழி பரையந்தரி உமைபங்கர னாருக்கொருசேயே
அசுரன்சிர மிரதம்பரி சிலையுங்கெட கோடுசரமும்பல படையும்பொடி கடலுங்கிரி சாயஅமர்கொண்டயில் விடுசெங்கர வொளிசெங்கதிர் போலத்திகழ்வோனே
மகரங்கொடி நிலவின்குடை மதனன்திரு தாதைமருகென்றணி விருதும்பல முரசங்கலை யோதமறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக்கதிர்வேலா
வடிவிந்திரன் மகள்சுந்தர மணமுங்கொடு மோகசரசங்குற மகள்பங்கொடு வளர்தென்புலி யூரில்மகிழும்புகழ் திருவம்பல மருவுங்கும ரேசப்பெருமாளே.
