Song 466
மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டு
- Sthalam
- சிதம்பரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்ததனனந் தனத்த தந்ததனதான
Lyrics
மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டுவளரும் தனத்த ணிந்தமணியாரம்
வளைசெங் கையிற்சி றந்த வொளிகண் டுநித்தி லங்குவரருந் திகைத்தி ரங்கவருமானார்
விதவிங் கிதப்ரி யங்கள் நகைகொஞ் சுதற்கு ணங்கள்மிகைகண் டுறக்க லங்கிமருளாதே
விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துனைப்பு கழ்ந்துமிகவிஞ் சுபொற்ப தங்கள்தருவாயே
நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்தநடநம் பருற்றி ருந்தகயிலாய
நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம்நவதுங் கரத்ந முந்துதிரடோ ளுஞ்
சிதையும் படிக்கொ ரம்பு தனைமுன் தொடுத்த கொண்டல்திறல்செங் கணச்சு தன்றன்மருகோனே
தினமுங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப ணிந்ததிருவம் பலத்த மர்ந்தபெருமாளே.
