Song 465
பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு
- Sthalam
- சிதம்பரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்ததனனந் தனத்த தந்ததனதான
Lyrics
பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டுபவளம் பதித்த செம்பொனிறமார்பிற்
படருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்தபலவிஞ் சையைப்பு லம்பியழகான
புருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந் துதித்த தென்றுபுளகஞ் செலுத்தி ரண்டுகயல்மேவும்
பொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ரபொடிகொண் டழிக்கும் வஞ்சருறவாமோ
உருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்துஉறவும் பிடித்த ணங்கைவனமீதே
ஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்துஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்தமணிமார்பா
செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்கசிவமஞ் செழுத்தை முந்தவிடுவோனே
தினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சுதிருவம் பலத்த மர்ந்தபெருமாளே.
