Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 462

திருடிக ளிணக்கிச் சம்ப ளம்பறி

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதன தனத்தத் தந்த தந்தனதனதன தனத்தத் தந்த தந்தனதனதன தனத்தத் தந்த தந்தனதனதான

Lyrics

திருடிக ளிணக்கிச் சம்ப ளம்பறிநடுவிகள் மயக்கிச் சங்க முண்கிகள்சிதடிகள் முலைக்கச் சும்பல் கண்டிகள்சதிகாரர்

செவிடிகள் மதப்பட் டுங்கு குண்டிகள்அசடிகள் பிணக்கிட் டும்பு றம்பிகள்செழுமிக ளழைத்திச் சங்கொ ளுஞ்செயர்வெகுமோகக்

குருடிகள் நகைத்திட் டம்பு லம்புகளுதடிகள் கணக்கிட் டும்பி ணங்கிகள்குசலிகள் மருத்திட் டுங்கொ டுங்குணர்விழியாலே

கொளுவிகள் மினுக்குச் சங்கி ரங்கிகள்நடனமு நடித்திட் டொங்கு சண்டிகள்குணமதில் முழுச்சுத் தசங்க்ய சங்கிகளுறவாமோ

இருடிய ரினத்துற் றும்ப தங்கொளுமறையவ னிலத்தொக் குஞ்சு கம்பெறுமிமையவ ரினக்கட் டுங்கு லைந்திடவருசூரர்

இபமொடு வெதித்தச் சிங்க மும்பலஇரதமொ டெதத்திக் கும்பி ளந்திடஇவுளியி ரதத்துற் றங்க மங்கிடவிடும்வேலா

அரிகரி யுரித்திட் டங்க சன்புரமெரிதர நகைத்துப் பங்க யன்சிரமளவொடு மறுத்துப் பண்ட ணிந்தவரருள்கோனே

அமரர்த மகட்கிட் டம்பு ரிந்துநல்குறவர்த மகட்பக் கஞ்சி றந்துறஅழகிய திருச்சிற் றம்ப லம்புகுபெருமாளே.

All songs →