Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 461

தனத்திற்குங் குமத்தைச்சந்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனத்தத்தந் தனத்தத்தந்தனத்தத்தந் தனத்தத்தந்தனத்தத்தந் தனத்தத்தந்----- 2 முறை --------தனதான

Lyrics

தனத்திற்குங் குமத்தைச்சந்தனத்தைக்கொண் டணைத்துச்சங்கிலிக்கொத்தும் பிலுக்குப்பொன்தனிற்கொத்துந் தரித்துச்சுந்தரத்திற்பண் பழித்துக்கண்சுழற்றிச்சண் பகப்புட்பங்குழல்மேவித்

தரத்தைக்கொண் டசைத்துப்பொன்தகைப்பட்டுந் தரித்துப்பின்சிரித்துக்கொண் டழைத்துக்கொந்தளத்தைத்தண் குலுக்கிச்சங்கலப்புத்தன் கரத்துக்கொண்டணைத்துச்சம் ப்ரமித்துக்கொண்டுறவாடிப்

புனித்தப்பஞ் சணைக்கட்டிண்படுத்துச்சந் தனப்பொட்டுங்குலைத்துப்பின் புயத்தைக்கொண்டணைத்துப்பின் சுகித்திட்டின்புகட்டிப்பொன் சரக்கொத்துஞ்சிதைப்பப்பொன் தரப்பற்றும்பொதுமாதர்

புணர்ப்பித்தும் பிடித்துப்பொன்கொடுத்துப்பின் பிதிர்ச்சித்தன்திணிக்கட்டுஞ் சிதைத்துக்கண்சிறுப்பப்புண் பிடித்தப்புண்புடைத்துக்கண் பழுத்துக்கண்டவர்க்குக்கண் புதைப்பச்சென்றுழல்வேனோ

சினத்துக்கண் சிவப்பச்சங்கொலிப்பத்திண் கவட்டுச்செங்குவட்டைச்சென் றிடித்துச்செண்டரைத்துக்கம் பிடிக்கப்பண்சிரத்தைப்பந் தடித்துக்கொண்டிறைத்துத்தெண் கடற்றிட்டுங்கொளைபோகச்

செழித்துப்பொன் சுரர்ச்சுற்றங்களித்துக்கொண் டளிப்புட்பஞ்சிறக்கப்பண் சிரத்திற்கொண்டிறைத்துச்செம் பதத்திற்கண்திளைப்பத்தந் தலைத்தழ்த்தம்புகழ்ச்செப்புஞ் சயத்துத்திண்புயவேளே

பனித்துட்கங் கசற்குக்கண்பரப்பித்தன் சினத்திற்றிண்புரத்தைக்கண் டெரித்துப்பண்கயத்தைப்பண் டுரித்துப்பன்பகைத்தக்கன் தவத்தைச்சென்றழித்துக்கொன் றடற்பித்தன்தருவாழ்வே

படைத்துப்பொன் றுடைத்திட்பன்தனைக்குட்டும் படுத்திப்பண்கடிப்புட்பங் கலைச்சுற்றும்பதத்தப்பண் புறச்சிற்றம்பலத்திற்கண் களித்தப்பைம்புனத்திற்செங் குறத்திப்பெண்பெருமாளே.

All songs →