Song 463
கொந்த ரங்குழ லிந்து வண்புரு
- Sthalam
- சிதம்பரம்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்த தந்தன தந்த தந்தனதந்த தந்தன தந்த தந்தனதந்த தந்தன தந்த தந்தனதந்ததான
Lyrics
கொந்த ரங்குழ லிந்து வண்புருவங்கள் கண்கய லுஞ்ச ரங்கணைகொண்ட ரம்பைய ரந்த முஞ்சசிதுண்டமாதர்
கொந்த ளங்கதி ரின்கு லங்களினுஞ்சு ழன்றிர சம்ப லங்கனிகொண்ட நண்பித ழின்சு கங்குயிலின்சொல்மேவுந்
தந்த வந்தர ளஞ்சி றந்தெழுகந்த ரங்கமு கென்ப பைங்கழைதண்பு யந்தளி ரின்கு டங்கையரம்பொனாரந்
தந்தி யின்குவ டின்த னங்களிரண்டை யுங்குலை கொண்டு விண்டவர்தங்க டம்படி யுங்க வண்டியசிந்தையாமோ
மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர்தங்க டைந்தவ னஞ்சு மங்குலிமந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெறஎந்தவாழ்வும்
வந்த ரம்பையெ ணும்ப கிர்ந்துநடங்கோ ளுந்திரு மங்கை பங்கினன்வண்டர் லங்கையு ளன்சி ரம்பொடிகண்டமாயோன்
உந்தி யின்புவ னங்க ளெங்குமடங்க வுண்டகு டங்கை யன்புகழொண்பு ரம்பொடி கண்ட எந்தையர்பங்கின்மேவும்
உம்ப லின்கலை மங்கை சங்கரிமைந்த னென்றய னும்பு கழ்ந்திடவொண்ப ரந்திரு வம்ப லந்திகழ்தம்பிரானே.
