Song 46
காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
- Sthalam
- திருச்செந்தூர்
- Raagam
- ஸஹானா / திலங்
- Thalam
- ஆதி கண்டநடை (20)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானனா தந்தனம் தானனா தந்தனம்தானனா தந்தனம்தனதான
Lyrics
காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்காலினார் தந்துடன்கொடுபோகக்
காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்கானமே பின்தொடர்ந்தலறாமுன்
சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்சூடுதோ ளுந்தடந்திருமார்பும்
தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந்தோகைமேல் கொண்டுமுன்வரவேணும்
ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்தேவர்வா ழன்றுகந்தமுதீயும்
ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்தாதிமா யன்றனன்மருகோனே
சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்சாரலார் செந்திலம்பதிவாழ்வே
தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்தாரைவே லுந்திடும்பெருமாளே.
