Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 47

குகர மேவுமெய்த் துறவினின் மறவாக்

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனன தானனத் தனதன தனனாத்தந்தத் தந்தத்தனதான

Lyrics

குகர மேவுமெய்த் துறவினின் மறவாக்கும்பிட் டுந்தித்தட்முழ்கிக்

குமுத வாயின்முற் றமுதினை நுகராக்கொண்டற் கொண்டைக்குழலாரோ

டகரு தூளிகர்ப் புரதன இருகோட்டன்புற் றின்பக்கடலு஡டே

அமிழு வேனைமெத் தெனவொரு கரைசேர்த்தம்பொற் றண்டைக்கழல்தாராய்

ககன கோளகைக் கணவிரு மளவாக்கங்கைத் துங்கப்புனலாடும்

கமல வாதனற் களவிட முடியாக்கம்பர்க் கொன்றைப்புகல்வோனே

சிகர கோபுரத் தினுமதி ளினுமேற்செம்பொற் கம்பத்தளமீதும்

தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச்செந்திற் கந்தப்பெருமாளே.

All songs →