Song 45
கன்றிலுறு மானை வென்றவிழி யாலே
- Sthalam
- திருச்செந்தூர்
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தந்ததன தான தந்ததன தானதந்ததன தானதனதான
Lyrics
கன்றிலுறு மானை வென்றவிழி யாலேகஞ்சமுகை மேவுமுலையநலே
கங்குல்செறி கேச மங்குல்குலை யாமைகந்தமலர் சூடுமதனாலே
நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசிநம்பவிடு மாதருடனாடி
நஞ்சுபுசி தேரை யங்கமது வாகநைந்துவிடு வேனையருள்பாராய்
குன்றிமணி போல்வ செங்கண்வரி போகிகொண்டபடம் வீசுமணிகூர்வாய்
கொண்ட மயிலேறி அன்றசுரர் சேனைகொன்றகும ரேசகுருநாதா
மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலைவண்டுபடு வாவிபுடைசூழ
மந்திநட மாடு செந்தினகர் மேவுமைந்தஅம ரேசர்பெருமாளே.
