Skip to content
73, Theppakula Street, Tiruchendur – 628 21589389 32989
தமிழ்

← Thiruppugazh

Song 441

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி

Thalam
கண்டசாபு (2 1/2)

சந்தம்

The rhythm reciters follow — not part of the lyrics

தனதான தத்ததன தனதான தத்ததனதனதான தத்ததனதனதான

Lyrics

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதிவறல்சூலை குட்டமொடுகுளிர்தாகம்

மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளைவருநீர டைப்பினுடன்வெகுகோடி

சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கைதெளியாவெ னக்குமினிமுடியாதே

சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழசிவஞான சித்திதனையருள்வாயே

தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொருசுடர்வீசு சக்ரமதையருள்ஞான

துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகுசுகவாரி சித்தனருள்முருகோனே

அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொடசுராரி றக்கவிடுமழல்வேலா

அமுதாச னத்திகுற மடவாள்க ரிப்பெணொடும்அருணா சலத்திலுறைபெருமாளே.

All songs →