Song 440
மொழிய நிறங்கறுத்து மகரவி னங்கலக்கி
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தந்ததத்த தனதன தந்ததத்ததனதன தந்ததத்ததனதான
Lyrics
மொழிய நிறங்கறுத்து மகரவி னங்கலக்கிமுடியவ ளைந்தரற்றுகடலாலும்
முதிரவி டம்பரப்பி வடவைமு கந்தழற்குள்முழுகியெ ழுந்திருக்குநிலவாலும்
மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்றமயல்தணி யும்படிக்குநினைவாயே
மரகத துங்கவெற்றி விகடந டங்கொள்சித்ரமயிலினில் வந்துமுத்திதரவேணும்
அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தினமுதத னம்படைத்ததிருமார்பா
அமரர்பு ரந்தனக்கு மழகிய செந்திலுக்குமருணைவ ளம்பதிக்குமிறையோனே
எழுபுவ னம்பிழைக்க அசுரர்சி ரந்தெறிக்கஎழுசயி லந்தொளைத்தசுடர்வேலா
இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்தரிவர்கள்ப யந்தவிர்த்தபெருமாளே.
