Song 442
விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தானாதன தனதன தானாதனதனதன தானாதனதனதான
Lyrics
விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகலவிழிகொடு வாபோவெனவுரையாடும்
விரகுட னுறாயிர மனமுடை மாபாவிகள்ம்ருகமத கோலாகலமுலைதோய
அடையவு மாசாபர வசமுறு கோமாளியைஅவனியு மாகாசமும்வசைபேசும்
அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனைஅடியவ ரோடாள்வதுமொருநாளே
வடகுல கோபாலர்த மொருபதி னாறாயிரம்வனிதையர் தோள்தோய்தருமபிராம
மரகத நாராயணன் மருமக சோணாசலமகிபச தாகாலமுமிளையோனே
உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுறஉலகுய வாரார்கலிவறிதாக
உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழஒருதனி வேலேவியபெருமாளே.
