Song 434
பூணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேக
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனதன தனந்த தான தனதன தனந்த தானதனதன தனந்த தானதனதான
Lyrics
பூணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேகபொறியுட லிறந்து போனதளவேதுன்
புகழ்மறை யறிந்து கூறு மினியென தகம்பொ னாவிபொருளென நினைந்து நாயெனிடர்தீர
மணமுணர் மடந்தை மாரொ டொளிர்திரு முகங்க ளாறுமணிகிரி யிடங்கொள் பாநுவெயிலாசை
வரிபர வநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போதமயில்மிசை மகிழ்ந்து நாடிவரவேணும்
பணைமுலை யரம்பை மார்கள் குயில்கிளி யினங்கள் போலபரிவுகொ டுகந்து வேதமதுகூறப்
பறைமுர சநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர்படைகட லிறந்து போகவிடும்வேலா
அணிசுக நரம்பு வீணை குயில்புற வினங்கள் போலஅமளியில் களங்க ளோசைவளர்மாது
அரிமகள் மணங்கொ டேகி யெனதிட ரெரிந்து போகஅருணையின் விலங்கல் மேவுபெருமாளே.
