Song 435
புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்
- Sthalam
- திருவருணை
- Raagam
- ஸிந்து பைரவி
- Thalam
- அங்கதாளம் (5 1/2)
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
Lyrics
புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்பொறையி லாத கோபீகன்முமுடன்
புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதிபொறிக ளோடி போய்வீழுமதிசூதன்
நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரிநெறியி லாத வேமாளிகுலபாதன்
நினது தாளை நாடோ று மனதி லாசை வீடாமல்நினையு மாறு நீமேவியருள்வாயே
சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்சிதையு மாறு போராடியொருசீதை
சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறுதிறமி யான மாமாயன்மருகோனே
அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவிஅமர தாடி யேதோகைமயிலேறி
அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்அருணை மீதி லேமேவுபெருமாளே.
