Song 433
பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தானா தானா தானா தானாதானா தானத்தனதான
Lyrics
பாலாய் நூலாய் தேனாய் நீளாய்பாகாய் வாய்சொற்கொடியார்தாம்
பாடா வாடா வேடா வாலேபாடா யீடற்றிடைபீறுந்
தோலா லேகா லாலே யூனாலேசூழ் பாசக்குடில்மாசு
தோயா மாயா வோயா நோயால்சோர்வாய் மாளக்கடவேனோ
ஞாலா மேலா வேதா போதாநாதா சோதிக்கிரியோனே
ஞானா சாரா வானாள் கோனேநானா வேதப்பொருளோனே
வேலா பாலா சீலா காராவேளே வேடக்கொடிகோவே
வீரா தாரா ஆறா தாராவீரா வீரப்பெருமாளே.
