Song 428
தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனன தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்ததனன தனத்தத் தனந்ததனதான
Lyrics
தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்துசடையை வளர்த்துப் புரிந்துபுலியாடை
சதிரொடு வப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்துதவமொரு சத்தத் தறிந்துதிருநீறு
கலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்துகதறு நிலைக்கைக் கமர்ந்தஎழிலோடே
கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்துகவலை யொழித்தற் கிரங்கியருள்வாயே
அலைகட லிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்துமமரு லகத்திற் புகுந்துமுயரானை
அருளொடு கைப்பற்றி வந்து மருண கிரிப்புக் கிருந்துமறிவு ளபத்தர்க் கிரங்குமிளையோனே
மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்துவறிது நகைத்திட் டிருந்தசிவனார்தம்
மதலை புனத்திற் புகுந்து நரவடி வுற்றுத் திரிந்துமறம யிலைச்சுற் றிவந்தபெருமாளே.
