Song 427
தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங்
- Sthalam
- திருவருணை
சந்தம்
The rhythm reciters follow — not part of the lyrics
தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்தனதான
Lyrics
தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங்கிளிகாடையி னணிலேரளி யாங்குரல் வாய்ந்ததிசெந்தகுமாமிட றொலியாரித ழாஞ்சுளை தேன்கனியின்சுவைசேருந்
தனபாரமு மலையாமென வோங்கிட மாம்பொறிசிந்திடவேல்விழி நுதலோசிலை வான்பிறை மாந்துளிரின்சரிரார்குழ லிருளாநகை யோங்கிய வான்கதிரின்சுடர்பாயக்
குமிழ்நாசியின் முகமோமதி யாங்குளிர் சேங்கமலஞ்சரிதோடிணை செவியாடுச லாங்கள பூங்கமுகங்கொடிநூலிடை யுடையாரன மாம்ப்ரியர் மாண்புரிமின்கொடிமாதர்
குணமோடம ளியினாடினு மோங்கிய பூங்கமலஞ்சரணுபுர குரலோசையு மேந்திடு மாண்டலையின்கொடியோடெழு தரிதாம்வடி வோங்கிய பாங்கையுமன்தகையேனே
திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந்தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந்திகுடோ டிமி டிமிடோ டிமி டாங்குட டிந்தகமென்றியல்பேரி
திநச்முடுக கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங்கரிதேர்பரி யசுரார்கள மாண்டிட நீண்டரவின்சிரமீள்பட குவடோ துகள் வான்பெற வாங்கியவண்கதிர்வேலா
கமழ்மாவிதழ் சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண்தழல்மாபொடி யருள்வோரடல் மான்துடி தாங்கியவண்கரர்மாடரு ளுமையாளெமை யீன்றவ ளீன்றருள்மென்குரவோனே
கடையேனிரு வினைநோய்மல மாண்டிட தீண்டியவொண்சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின்கலைநூலுடை முருகாவழ லோங்கிய வோங்கலின்வண்பெருமாளே.
